10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட உத்தரவு - நிபந்தனைகள் - ஆதிதிராவிட நலத்துறை ஆணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 9, 2023

10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கிட உத்தரவு - நிபந்தனைகள் - ஆதிதிராவிட நலத்துறை ஆணை

 




ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள், 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை / பட்டதாரி/ உடற்கல்வி / கணினிபயிற்றுநர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் (அரசின் முன் அனுமதியுடனும் 1 அனுமதியில்லாமலும் உயர்கல்வி பயின்றவர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட பார்வை 8-ல் காணும் அரசு கடிதத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

i ஒரு ஆசிரியரின் மொத்த பணிக்காலத்தில் அதிகப்பட்சமாக இரு ஊக்க ஊதிய உயர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.


ii. இவ்வாசிரியர்கள் 10.03.2020-க்கு முன்னர் உயர் கல்வி பயின்றுள்ளதையும். இவ்வுயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு முன்னதாக வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.


iii தனியர்களின் உயர்கல்வி குறித்த விவரங்கள் சரிபாத்துக் கொள்ளப்பட வேண்டும். 


iv. பார்வை - 2 மற்றும் 3-இல் காணும் அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உயர்கல்விக்கான தகுதிகளை முடித்துள்ளனரா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


எனவே மேற்காணும் நிபந்தனைக்குட்பட்டு 10.03.2020-க்கு முன்னதாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற்று வழங்கப்படாத இடைநிலை

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசின் முன் அனுமதியுடனும் / அனுமதியில்லாமலும் உயர்கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க உதிய உயர்வு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்பொருண்மை தொடர்பாக தவறு ஏற்படின் தாங்களே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.


Click Here to Download - ADW - Higher Education Incentive - Director Letter - Pdf



Post Top Ad