TET - ஆசிரியர் பணிக்கு மீண்டும் வெயிட்டேஜ் முறை? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 5, 2023

TET - ஆசிரியர் பணிக்கு மீண்டும் வெயிட்டேஜ் முறை?

 



அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, போட்டி தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, 'வெயிட்டேஜ்' முறையை அமல்படுத்தலாமா என, பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.


அரசு பள்ளிகளில், 6,553 இடைநிலை ஆசிரியர்கள், 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 13,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, பாடங்கள் நடத்தப்படுகின்றன.


அதே நேரம், காலியிடங்களை நிரந்தரமாக நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளிக் கல்வி துறை கடந்த ஆண்டே முடிவு செய்தது.


இதற்காக, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, மே மற்றும் ஜூன் மாதங்களில் போட்டி தேர்வு நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால், திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடியாமல், பள்ளிக் கல்வித் துறை குழப்பத்தில் உள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், மீண்டும் ஒரு போட்டி தேர்வை எழுத தயக்கம் காட்டுகின்றனர். அதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி, போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.


எனவே, லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க, போட்டி தேர்வு நடத்தாமல், 'வெயிட்டேஜ்' முறையில் பணி நியமனம் மேற்கொள்ளலாமா என, பள்ளிக் கல்வித் துறை மற்றும் மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


அதாவது, ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்ணுடன், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தட்டச்சு போன்ற இதர படிப்புகளின் அடிப்படையில், அவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம் என்றும், தரவரிசை பட்டியல் தயாரித்து பணி நியமனம் மேற்கொள்ளலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்துள்ளது.


Post Top Ad