கடலூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்றில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்த மாநகர மேயர் சுந்தரி ராஜா, பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். சிங்காரத்தோப்பில் செயல்படும் அந்த பள்ளிக்கு வந்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியை தாமதமாக வந்து சேர்ந்தார்.
ஆசிரியர்கள் சுழற்சி முறையில் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றுவதாக கூறினாலும், அதை ஏற்க மறுத்த மேயர், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment