பள்ளிக்கல்வியில் நியமிக்கப்பட்ட, 678 பணியாளர்களுக்கும், புதிதாக டிஜிட்டல் வழி பணிக்கான, 3 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வழியே, பள்ளிக்கல்வித் துறையில் தேர்வான, 678 இளநிலை உதவியாளர்கள், இன்று பணியில் சேர உள்ளனர்.
இவர்களுக்கு டிஜிட்டல் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. மூன்று நாள் உணவு, தங்கும் வசதி உண்டு.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும்,'எமிஸ்' பதிவுகள், மாணவர் நலத்திட்ட விபரங்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் ஆன்லைன் செயல்முறைகள், அலுவலகங்களின் டிஜிட்டல் பணி நடைமுறைகள் போன்றவை, இந்த பயிற்சியில் அடங்கும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment