20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே selection grade வழங்கப்படும் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பொருள்: மேல்நிலைக்கல்வி பணி - கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் கல்வி மாவட்டம், காமராஜ்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் திரு.ச.வேல்ராஜ் என்பார் பட்டதாரி ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை அனுமதி ஆணை வேண்டியது குறைபாடுகள் காரணமாக கருத்துரு திருப்புதல் சார்பாக
பார்வை: தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, காமராஜ்நகர்
கடிதம் ந.க.எண்.111/2023 நாள் 0108-2023
பார்வையில் காண் கடிதத்தின்படி கோயம்புத்தூர் கல்வி மாவட்டம், காமராஜ்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ( கணிதம்) ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.ச.வேல்ராஜ் என்பார் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து தேர்வு நிலை அனுமதி ஆணை வேண்டிய கருத்துரு இவ்வலுவ லகத்தில் பெறப்பட்டுள்ளது.
சார்ந்த ஆசிரியரது கருத்துரு பரிசீலிக்கப்பட்டதில் கீழ்க்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
குறைபாடுகள்
1 29.07-2011க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என W.A.No.313, 333, 1891, 2050, 2082 2617, 2795, OF 2022 வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அன்னார் நாளதுவரை ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெறாத நிலையில் அன்னாரது கருத்துரு பரிசீலிக்க இயலாது.
மேற்காண் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரிபார்ப்பு பட்டியலில் கோரப்பட்ட விவரங்களின்படி முழுமையான வடிவில் தயார் செய்து தலைமையாசிரியர் உரியமுறையில் பரிசீலித்து உரிய ஆவணங்கள் இணைத்து தேர்வுநிலை பெற தகுதியிருப்பின் மட்டும் கருத்துருவினை மீள அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். பெறப்பட்ட கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு அசலாக இத்துடன் இணைத்து திருப்பப்படுகிறது
இணைப்பு கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு அசல்'
No comments:
Post a Comment