கோட்டை முற்றுகை - பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 22, 2023

கோட்டை முற்றுகை - பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு

 

கோட்டை முற்றுகை - பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு:


முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதமாக முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்பதே இவர்களின் போராட்டத்திற்கு காரணம்.


12 ஆயிரம் குடும்பங்கள் 12 ஆண்டாக ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.


இதனால் சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த 181-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர் அரசுப் பள்ளிகளில் 12 ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள்.


பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள முதல்வர் ஸ்டாலின் , இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


சட்டமன்றமும் வருகின்ற அக்டோபர் 9ந்தேதி கூடவுள்ளது என்பதால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை எழுந்து வருகிறது.


இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது :


முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதால் தான் கோட்டை முற்றுகையிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.



கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் கோட்டைக்கே வந்து என்னை சந்தித்து கேளுங்கள் என உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் சொன்னதை முதல்வராகி இன்னும் செய்யாமல் உள்ளதை பலவழியில் நினைவுபடுத்தியும் அதை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் எல்லோர் மத்தியில் உள்ளது.


பணி நிரந்தரம் கிடைக்காத ஏக்கத்தில் மரணம் அடைந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும்.


10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் 12 ஆண்டாக பரிதவிப்பதை மனிதாபிமானம் கொண்டு முதல்வர் மீட்டு பணி நிரந்தரம் என்ற வாழ்வாதாரம் தர வேண்டும்.


தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஆணையிட்டால் தான் நடக்கும். இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.


----------------------------------------


S. செந்தில் குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

செல் : 9487257203



Post Top Ad