இடைநிலை ஆசிரியர்கள் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் - Asiriyar.Net

Tuesday, September 26, 2023

இடைநிலை ஆசிரியர்கள் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்

 

பள்ளிக்கல்வித் துறை செயலருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வரும் 28-ம் தேதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.                    

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.    


இந்நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் வரும் 28-ம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.              


இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று ஆசிரியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் சங்கத்தினர், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை செயலரிடம் அளித்தனர்.       


பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொருளாளர் கண்ணன் கூறியதாவது:.    


தேர்தல் வாக்குறுதி: 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் வேறுபாடுகள் உள்ளன. அதை சரி செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் எங்கள் கோரிக்கையை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். 


அதனடிப்படையில் திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்களது கோரிக்கை இணைக்கப்பட்டது.                


பின்னர், இந்த கோரிக்கை தொடர்பாக அரசாணை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி, கடந்த ஜனவரிமாதம் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 


ஆனால் கடந்த 9 மாதங்களாக இந்த ஊதிய முரண்பாடால், இடைநிலை ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எங்கள் இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதிமுதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தோம்.எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.


இந்த ஊதிய முரண்பாடால், இடைநிலை ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எங்கள் இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதிமுதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தோம்.    


போராட்ட அறிவிப்பை 40நாட்கள் முன் அரசுக்குத் தெரிவித்தோம். பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது கோரிக்கையை நிறைவேற்ற அரசு காலம் தாழ்த்துவது போன்று தெரிந்தது. எனவே, எங்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. 


சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.




Post Top Ad