மனிதனுக்கு எப்போதும் டென்ஷன் என்பது ஒருவித மன நோயாக கருதப்படுகிறது. ஒரு நபர் அதிகமாக கோபப்பட்டாலோ, டென்ஷன் ஆனாலோ அது அவர்களின் உடல் நலனை பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது திருச்சி அருகே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியில், ஆலம்பாக்கம் என்ற கிராமத்தில் இருக்கின்ற புனித தோமையார் துவக்கப் பள்ளியில், அன்னாள் ஜெயமேரி என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது அந்த பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அன்னாள் ஜெயமேரி தன்னுடைய மாணவர்களுக்கு எமிஸ் என்ற செயலியின் மூலமாக காலாண்டு தேர்வை நடத்தி, அதில் விவரங்களை பதிவு செய்தார். ஆனால் தேர்வு முடிவடைந்த பிறகு ஆசிரியை பதிவு செய்த விவரங்கள் அந்த செயலில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அதிர்ச்சியில் உறைந்த ஜெயமேறி இது தொடர்பாக சக ஆசிரியர் ஒருவரிடம் ஒருவித பதற்றத்துடன் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அவர் திடீரென்று மயக்கம் அடைந்து கீழே சரிந்தார். இதனால், பதறிப் போன சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயமேரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திடீரென்று ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது
No comments:
Post a Comment