பள்ளிகளில் தற்போது நடக்கும் முதல் பருவத்தேர்வில் 4, 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வித்தாளில் 60 மதிப்பெண்கள் என குறிப்பிட்டிருந்தாலும் வினாக்கள் வாரியாக மதிப்பெண் விவரம் பிரித்து வழங்கப்படாததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் வினாத்தாள்களை தயாரிக்கின்றன. தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை பள்ளிகளில் டவுன் லோடு செய்து வினாத்தாள்களை பிரின்ட் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
பல பள்ளிகளில் பிரின்டர் வசதி செய்து தரப்படவில்லை. கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் கேள்வித்தாள் டவுன்லோடு செய்து பிரின்ட் எடுப்பதற்கு கடை கடையாக அலையும் நிலை உள்ளது. கேள்வித்தாளில் 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது.
இதில் மொத்த மதிப்பெண்கள் மட்டுமே வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் இது தான் மதிப்பெண் என குறிப்பிடப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் எந்த வினாவிற்கு எத்தனை மதிப்பெண் வழங்குவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வினாத்தாளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment