தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - ஆசிரியை மீது வழக்கு - CEO விசாரணை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 29, 2023

தலைமை ஆசிரியை மீது தாக்குதல் - ஆசிரியை மீது வழக்கு - CEO விசாரணை!

 




நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.


இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.


இதையும் படியுங்கள்: கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களே உஷார்....

இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கினார்.


மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.


போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Top Ad