இந்து சமயத்தில் பல கடவுள்கள் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் முதற்கடவுளாக வணங்கப்படக்கூடியவர் விநாயகப் பெருமான்.
கணங்களின் நாயகன் கணபதி. வினை தீர்ப்பான் விநாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரரான யானை முகத்தான் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல் நாட்டில் பல இடங்களில் பெரிய விநயகார் சிலைகளை வைத்து வழிபடுவதும், தொடர்ந்து அந்த சுவாமி சிலையை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைக்கப்படுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட பூஜை நேரம் :
சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை உள்ளது.
காலை 11:39 மணி முதல் 1.28 மணி வரை வழிபாடு செய்யலாம்
(அல்லது )
காலை 9.15 மணி முதல் 10:15 மணி வரை வழிபாடு செய்யலாம்
(அல்லது )
மாலை 7 மணி முதல் 8 மணி வரை வழிபாடு செய்யலாம்
சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை உள்ளது. மாலையில் செய்ய நேரம் இல்லாதவர்கள் காலை வழிபாடு செய்யலாம்.
No comments:
Post a Comment