தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 25, 2023

தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி

 



மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்,  மூன்று  ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ததால் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரோகிணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்கக்கோரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்திருந்தார்.


இதனை கடந்த 2019 ம் ஆண்டு  விசாரித்த உயர் நீதிமன்ற கிளை,  இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கில் தொடக்க கல்வித்துறை இதுநாள் வரை பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது.


நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டும் மூன்றாண்டு காலமாக பதில் அளிக்காததால் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற  கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Post Top Ad