கடந்த நிதி ஆண்டு 2022-2023 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் SNA கணக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வங்கிக் கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்துவதோ ( அல்லது ) வேறு திட்ட நிதிகளோ பணப்பரிவர்த்தனை செய்தால் , அத்தொகை மாநிலத்திட்ட இயக்கக SNA வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது.
இத்தொகையை மீளப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இவ்விவரத்தினை தொலைபேசி வாயிலாக பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.
இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க , இதனை அனைத்து வட்டார வளமையங்கள் , SNA கணக்கு முறையை செயல்படுத்தும் பள்ளி , ( Child Agency of Each BRC ) , KGBV மையங்கள் , NSCBAV மையங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment