நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வழிக்காட்டி - மதிப்பீடு நெறிமுறைகள் - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 6, 2023

நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வழிக்காட்டி - மதிப்பீடு நெறிமுறைகள் - Proceedings

 




ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் 2023-24 கல்வியாண்டு- அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புபயிலும் மாவணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி மதிப்பீடு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து.


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாவணர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு வருகின்ற செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் செப்டம்பர் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்:

கணினி மடிக்கணினி ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மதிப்பீடு நடத்திட முடியும். இச்செயல்பாட்டினை நடத்திட தேவையான இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதி செய்திடல் வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பீடு தொடங்கும் முன் (05.09.2023) அன்று வழங்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளக்கான பாடவேளையில் கீழ்க்காணும் அத்தியாயங்களை திருப்புதல் ( Revision) வகுப்புகளாக மாணவர்களுக்கு நடத்திட வேண்டும்.


செயல்பாட்டு வழிமுறைகள்:

>இந்த மதிப்பீட்டை கணினி மடிக்கணினி ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளலாம்.

http://exams.tnschools.gov.in.login - என்ற இணையதள முகவியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் @ என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

உள் நுழைந்ததும் உயர்கல்வி வழிகாட்டி புத்தகத்தில் உள்ள கீழ்க்காணும் அத்தியாயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். மாணவர்கள் பதட்டம் ஏதுமின்றி தங்களுக்கு தெரிந்த விடைகளை பதிவு செய்ய வேண்டும். விடைகள் அளித்த பின் Save & Submit கொடுத்து வெளியேறலாம்.


Click Here to Download - Naan Mudhalvan Scheme - Assessment Guidelines - Proceedings - Pdf



Post Top Ad