NILA - ஆகஸ்டு சிறார் திரைப்படம் - கதைச் சுருக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 11, 2023

NILA - ஆகஸ்டு சிறார் திரைப்படம் - கதைச் சுருக்கம்

 




சிறார் திரைப்படம் - திரையிடுதல் ஆகஸ்டு 2023-24 - ஆகஸ்டு 2023-24 - அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் -சிறார் திரைப்படம் திரையிடுதல் வழிகாட்டும் - நெறிமுறைகள்வழங்குதல் - சார்ந்து.


இணைப்பு-2 கதைச் சுருக்கம்-நிலா


ஞானபாநு தயாரிப்பில் எழுத்தாளர் ஞாநி அவர்கள் எழுதி இயக்கிய சிறார் குறும்படம். ஒரு பெரிய நாட்டின் இளவரசி தான் கயல்விழி. அவளுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போக அவளை குணமாக்க பேரரசர் மருத்துவரை வரவழைக்கிறார். இளவரசியை குணமாக்க அவள் கேட்பதை பரிசளித்தால் போதும் என்று மருத்துவர் கூறுகிறார். இளவரசி கயல்விழியோ வான்நிலா வேண்டும் என ஏக்கமாக கேட்கிறாள். தனது மகளின் மீது அளவற்ற பாசமுள்ள பேரரசன் நிலாவை பரிசளிக்க அமைச்சர், மந்திரவாதி, கணிதர் என எல்லோரிடமும் உதவியை நாடுகிறார். இறுதியில் கோமாளி வரவழைக்கப்படுகிறார். கோமாளி நிலாவை இளவரசிக்கு பரிசளித்தானா; இளவரசி குணமடைந்தாளா என்பதே மீதிக்கதை.


இக்கதை குழந்தைகளின் சிக்கல்களுக்கு குழந்தைகளே தீர்வு காண்பதை மிக எளிமையாக இயல்பாக எடுத்துக் கூறுகிறது. குழந்தைகளுக்கான தீர்வு பெரியவர்கள் பார்வையில் இருந்து பார்க்கும் போது தீர்வு காண சிக்கலானதாகவும் கடுமையானதாகவும் புலப்படுகிறது. ஆனால் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாக சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண்கிறார்கள் என்பதை மிக அழகாக இத்திரைப்படம் காட்சிப்படுத்துகிறது.





Post Top Ad