மத்தியப்பிரதேசத்தில் இரண்டு குழந்தை விதிமுறையை மறைத்து பள்ளியில் சேர்ந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் ப்ஹிண்ட் பகுதியை சேர்ந்த கணேஷ் பிரசாத் சர்மா. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மாநிலத்தில் இரண்டு குழந்தை கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்படி இரண்டு குழந்தைகள் வரை உள்ளவர்கள் மட்டுமே அரசின் சலுகை, மானியங்களை பெற முடியும்.
இந்நிலையில் தனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக கூறி கணேஷ் பிரசாத் சர்மா இந்த ஆண்டு மார்ச் மாதம் அமயானில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
கணேஷ்க்கு 3 குழந்தைகள் இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் தனக்கு 3வது குழந்தை இருப்பதை மறைத்து பணியில் சேர்ந்தது ஊர்ஜிதமானது. இதனை தொடர்ந்து அவரை பணியில் இருந்து நீக்குவதற்கு அரசின் பொது நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment