25.08.2023 முதல் அனைத்து தொடக்கக் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, August 16, 2023

25.08.2023 முதல் அனைத்து தொடக்கக் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் - Director Proceedings

 

மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ , மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம் நாகை மாவட்டம் , திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்படுகிறது. 


அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை ( 2 ) ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அத்திட்டத்தினை மேற்கொள்ள செயல்படுத்திட தக்க நடவடிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post Top Ad