அரசு பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு, பணிமாறுதலில், முதுநிலை ஆசிரியர் பணி வழங்குவதற்கு, பள்ளி கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி மேல்நிலை பிரிவு இணை இயக்குனர் குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித் துறை அமைச்சு பணியாளர்கள், ௨ சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், பணிமாறுதல் வழியாக, முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
இதற்கு தகுதியானவர்களின் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.பட்டியலில் இடம்பெற உள்ளவர்கள், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலையில், முதன்மை பாடமும், பி.எட்., கல்வியியல் படிப்பும் படித்திருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment