பிளஸ் 2 வினாத்தாள் மாதிரி வௌியாகுமா? - Asiriyar.Net

Saturday, February 20, 2021

பிளஸ் 2 வினாத்தாள் மாதிரி வௌியாகுமா?

 






குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில், பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை அறிய, மாதிரியை வெளியிட வேண்டுமென, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால், வாரத்தின் ஆறு நாட்களும், மாணவர்களுக்கு பாடம்நடத்தப்படுகிறது.மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கி, 21ல் முடியும் என, கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



தேர்தல் மற்றும் கொரோனா பிரச்னையால், மார்ச்சில் நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வு, இரண்டு மாதம் தாமதமாக நடக்க உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான வினா மாதிரி எப்படி இருக்கும் என தெரியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.இந்த முறை, பாடத் திட்டம், 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.



அதேபோல, வினாத்தாள் முறையிலும் மாற்றம் இருக்கும் என, பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.அதனால், மாற்றம் என்பது, எப்படி இருக்கும் என, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டு மென, பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad