பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ? - Asiriyar.Net

Thursday, February 18, 2021

பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ?

 


பால் குக்கரில் பால் பொங்கி வழியாமல் கொதிப்பது எவ்வாறு நிகழ்கிறது ?

 




திறந்த பாத்திரத்தில் கொதிக்க வைக்கப்படும் பால் அனைத்துத் திசைகளிலும் சீராக வெப்பமடைவதில்லை. இவ்வெப்ப நிலையில் பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள பாலில் விரவியுள்ள தண்ணீர் ,நீராவியாக மாறி அதிக அழுத்தத்துடன் வெளியேறுகிறது ,பால் பொங்கிவிடுகிறது.



ஆனால் இரட்டை சுவர் பால்குக்கரில் இடைவெளியில் நிரப்பி பாலைக் கொதிக்க வைக்கும் பொழுது , முதலில் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கிறது.இந்த வெப்பமானது பாத்திரத்தினுள் இருக்கும் பாலை சூடேற்றுகிறது.மேலும் வெப்பமடைந்த நீர் பாலைச் சீரான கதியில் சூடேற்றி வருகிறது., பால் 100° c வரை சூடேற்றப்படுகிறது.



இவ்வெப்பநிலையில் ஆவியாகும் நீர் விசில் வழியே வெளியேறி ஒலியெழுப்புகிறது.பால் கூக்கரில் சமமாக வெப்பப்டுத்தப் படுவதால் பால் பொங்குவதில்லை, பாலாடையும் படிவதில்லை.

Post Top Ad