'கணினி அறிவியல் தேர்வு முறைகேடு புகார்கள் இருந்தால், மார்ச், 1க்குள் அனுப்பலாம். - Asiriyar.Net

Saturday, February 20, 2021

'கணினி அறிவியல் தேர்வு முறைகேடு புகார்கள் இருந்தால், மார்ச், 1க்குள் அனுப்பலாம்.

 





'கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, புகார்கள் இருந்தால், மார்ச், 1க்குள் அனுப்ப வேண்டும்' என, இரு நபர் விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது.



கமிட்டி வெளியிட்டு உள்ள அறிவிப்பு: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 கணினி பயிற்றுனர் இடங்களை நிரப்ப, 2019 ஜூனில் தேர்வு நடந்தது. மாநிலம் முழுதும் பல மையங்களில் நடந்த, இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.




இதுகுறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இரு நபர் கமிட்டி விசாரணை துவங்கியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், தங்களுக்கு தேர்வு தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால், அதை மார்ச், 1, மாலை, 5:00 மணிக்குள், trbtwomemberscommittee @ gmail.com என்ற, இ- - மெயிலில் அனுப்பலாம்.



அதன் பிரதிகளை, சென்னையில், பள்ளிக்கல்வி வளாகத்தில் செயல்படும், இரு நபர் கமிட்டிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். புகார் தெரிவிப்பவர், கமிட்டி அழைக்கும் போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad