பிளஸ் 2 மாணவருக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு? - Asiriyar.Net

Saturday, February 20, 2021

பிளஸ் 2 மாணவருக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு?

 






பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் செய்முறைத் தேர்வு நடத்தும் விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் மணிவாசகன் தெரிவித்தார்.



மதுரையில் அவர் மேலும் கூறியதாவது: பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை நடத்தும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாரம் ஆறு நாட்கள் பள்ளி செயல்படுவதால் அவர்கள் படித்தவற்றை திருப்புதல் செய்வதில் மிகவும் தொய்வு ஏற்பட்டுள்ளது.வாரம் ஞாயிறு மட்டும் விடுமுறை என்பதால் 50 சதவீதத்திற்கு மேல் உள்ள பெண் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் பணியினை மற்றும் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.



எனவே மாணவர் நலன் கருதி வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாகவும், ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரம் பணிபுரியும் வகையிலும் மாற்றம் செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். அனைத்து சனியும் வேலை நாட்கள் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad