அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான, துறை ரீதியான தேர்வு, நடந்தது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் துறை தேர்வுகள் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான, துறைத்தேர்வு, நேற்று நடத்தப்பட்டது.
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட, இந்த தேர்வில், மாநிலம் முழுதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல இடங்களில் ஆசிரியர்கள், தேர்வுக்கு சென்றதால், சில வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சில பள்ளிகளில், மாற்று ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர்.