தொடக்க கல்வி துறையில் நாளை முதல் நடைபெறவிருந்த அனைத்து பதவி உயர்வு கலந்தாய்விற்கும் மாநில அளவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்துள்ளது
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு மட்டும் அளித்து வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்களால் 2 வழக்குகள் தொடரப்பட்டதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (26.06.2021) தடையாணை வழங்கியுள்ளது.

*பணி முன்னுரிமை உள்ள ஆசிரியர்களுக்கும், சிறப்பு முன்னுரிமை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கும் பொதுமாறுதலில் முன்னுரிமை அளித்து மாறுதல் வழங்கும் அரசின் பழைய நடைமுறையை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் எவ்வித அரசின் வழிகாட்டுதலின்றி தாமாக ரத்து செய்துவிட்டு, பணியில் இளையவர்களுக்கு பதவி உயர்வினை மட்டும் வழங்கி வெளியிட்டுள்ள இயக்குனரின் உத்தரவுக்கு தடை கேட்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல் மிகு பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் மதிப்புமிகு வழக்கறிஞர் திரு. G.சங்கரன் அவர்களின் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று இரண்டு வழக்குகள் தொடுத்திருந்தார்கள்.
இது WP.NO. 4079, 4083 என்ற எண் கொண்ட வழக்காக இன்று (26.02.2021) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் எவ்வித பயணப்படியும் வழங்கப்படுவதில்லை, எவ்வித செலவினமும் அரசுக்கு ஏற்படுவதில்லை என நமது வழக்கறிஞர் அவர்களால் வாதிடப்பட்டது. வாதத்திற்குப்பின் வரும் செவ்வாய் வரை எந்த வித கலந்தாய்வும் நடைபெறக் கூடாது என தடை வழங்கி வழக்கினை வரும் செவ்வாய்கிழமைக்கு நீதிபதி அவர்கள் ஒத்தி வைத்தார்கள்.
No comments:
Post a Comment