9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார்
9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் ஒன்று, 9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக, கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது .மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது.மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடபடும் என தெரிவிக்கபட்டுள்ளது .
No comments:
Post a Comment