பள்ளிகளில் பி.டி.ஏ., இணைப்பு ஆசிரியர்கள் அதிருப்தி - Asiriyar.Net

Thursday, February 25, 2021

பள்ளிகளில் பி.டி.ஏ., இணைப்பு ஆசிரியர்கள் அதிருப்தி

 



கொரோனாவால் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கான (பி.டி.ஏ.,) இணைப்பு கட்டணத்தை பள்ளிகள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் மாணவரிடம் வசூலிக்கப்படும் பி.டி.ஏ., கட்டணத்தில் இருந்து மாநில பி.டி.ஏ.,விற்கு இணைப்பு கட்டணம் (ஆண்டு சந்தா உட்பட) செலுத்த வேண்டும்.கொரோனாவால் தொடக்க, நடுநிலை பள்ளிகள் இதுவரை செயல்படவில்லை. உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர் வருகை இருந்தாலும் அவர்களிடம் பி.டி.ஏ., கட்டணம் இன்னும் வசூலிக்கவில்லை.


இந்நிலையில் 2020-2021க்கு தொடக்க பள்ளிக்கு - ரூ.210, நடுநிலைக்கு - ரூ.285, உயர்நிலைக்கு - ரூ.860, மேல்நிலைக்கு - ரூ.1260 என இணைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு மார்ச் 1க்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மாநில அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இக்கட்டணம் வசூலிக்கப்படும்.இதன் மூலம் துாய்மை மற்றும் வாட்ச்மேன் சம்பளம் உள்ளிட்டவை ஈடுசெய்யப்படும்.இந்தாண்டு இதுவரை கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் உரிய நேரத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.கொரோனா பரவலை முன்னிட்டு மாணவர் நலன் கருதி இந்தாண்டு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

Post Top Ad