மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும், பரிந்துரை பட்டியலின் செல்லுபடி காலம், ஆறு மாதத்தில் இருந்து, ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில அரசு பணி காலியிடங்களில், பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றின் வரம்புக்கு உட்படாத காலியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு, ஆட்கள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.தற்காலிக மற்றும் நிரந்தர காலி பணியிடங்களுக்கு, 1:5 என்ற விகிதத்தில், வேலை அளிப்பவருக்கு பரிந்துரை பட்டியல், அனுப்பி வைக்கப்படுகிறது.
பரிந்துரை பட்டியல்களின் செல்லுபடி காலம், அனுப்பி வைக்கப்படும் தேதியில் இருந்து, ஆறு மாதங்களாகும்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து, நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவற்றை பரிசீலித்து தேர்வு செய்ய, அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.எனவே, பரிந்துரை பட்டியலின் செல்லுபடி காலம், ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் முகமது நசிமுதீன் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment