புதிய வாடிக்கையாளர்களுக்காக, 'பிரீபெய்டு - 47' என்ற புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: புதிய பிரீபெய்டு வாடிக்கையாளர் களுக்காக, 47 ரூபாய்க்கு, 'பிரீபெய்டு - 47' என்ற திட்டம், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில், அளவில்லா குரல் அழைப்புடன், 14 ஜி.பி., இலவச டேட்டா பெறலாம்; தினந்தோறும், 100 இலவச எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
விளம்பர நோக்கிலான இந்தச் சலுகை, 28 நாட்கள் செல்லுபடியாகும். இதேபோல, புதிய வாடிக்கையாளர்களுக்காக, 'பிளான் வவுச்சர் -108' என்ற திட்டத்தின் கால அளவு, 45 நாட்களில் இருந்து, 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், அளவற்ற குரல் அழைப்பு, தினசரி, 1 ஜி.பி., டேட்டா, இலவசமாக, 500 எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடியும். இதர தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இருந்து, பி.எஸ்.என்.எல்.,க்கு மாறிய புதிய வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'சிம்' வழங்கப்படுகிறது; பிளான் வவுச்சர் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.