தேர்தல் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும்: மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு - Asiriyar.Net

Thursday, February 25, 2021

தேர்தல் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும்: மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

 






தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளுக்கான பணிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தீவிரப்படுத்தியுள்ளார். 



அதன்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ”தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பயிற்சி வகுப்புகள் துவங்க வேண்டும். 



மாவட்டங்களில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு மார்ச் மாதம் முதல் வாரத்திலும், தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவினருக்கு இந்த மாதம் 28ம் தேதிக்கு முன்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad