ஜனவரி 31ல் நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளில் 4,14,798 பேரும், இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றனர்.
www.ctet.nic.in என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு எழுதிய 12,47,217 பேரில் 4,14,798 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு எழுதிய 11,04,454 பேரில் 2,39,501 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களின் தேர்வு முடிவுகள் DigiLocker முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வர்கள் தங்களது நுழைவு எண்ணை கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேர்வு முடிவு தற்போது சிபிஎஸ்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Click Here To CTET Result - 2021