குரும்பபாளையம், ஊர் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மருதாசலம். இவரது மகள் பூமா, 14. வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 5 ஆண்டுகளாக, இருதய கோளாறு காரணமாக, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று மாலை, பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது, மயங்கி விழுந்தார். பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment