ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள வேட்டைக்காரன் கோயிலில் ரூ.4.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட படகு சவாரியுடன் கூடிய பூங்காவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
முன்னதாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகியோர் படகு சவாரியை தொடங்கி வைப்பதற்காக விசைப்படகில் ஏறினர்.
அப்போது படகு தடுமாறி கவிழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக படகை இயக்குபவர் அருகில் இருந்த தடுப்பு கம்பியை பிடித்ததால் படகு கவிழாமல் தப்பித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஏரியில் சில நிமிடங்கள் மட்டுமே படகில் சுற்றிவந்த அமைச்சர்கள் கரைக்கு திரும்பி விட்டனர்.
No comments:
Post a Comment