ஓய்வு வயது 60 - தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் - Asiriyar.Net

Thursday, February 25, 2021

ஓய்வு வயது 60 - தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்

 






அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த ஆண்டு மே 31 முதல் இது அமலாகிறது.


இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததாவது:



“தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.


இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே.31/2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”.


இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad