முன்பருவ கல்வி ஆசிரியர் அரசாணை - முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் - Asiriyar.Net

Monday, February 1, 2021

முன்பருவ கல்வி ஆசிரியர் அரசாணை - முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம்

 






''கற்பித்தலில் ஈடுபடும் அங்கன்வாடி பணியாளர்களின் பெயரை 'முன்பருவ கல்வி ஆசிரியர்' என மாற்றி அரசாணை வெளியிட வேண்டும்'' என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



அவர் கூறியதாவது:''அரசின் கணக்கெடுப்பு விபரங்களை நாங்கள் தெருதெருவாக சேகரித்து தருகிறோம். எங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வில்லை. அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 100 கி.மீ., பயணம் செய்து பணி கவனிக்கிறோம். ஆனால், பயணப் படியாக வழங்கும் ரூ.40யை அதிகரிக்க வேண்டும். சீருடையாக 2 சேலைகள் வழங்குகிறார்கள். 



அதில் ஜாக்கெட் தைக்க முடியாததால் செலவு அதிகமாகிறது. சீருடைகளை அதிகரித்து தர வேண்டும். முன்பருவ கல்வி கற்பித்தல் கடினமானது. அதனை ஆங்கில பள்ளிக்கு இணையாக கற்று அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கற்று தருகிறோம். எனவே கற்பித்தல் பணியாளர்களை முன்பருவக்கல்வி ஆசிரியர்'' என பணிப்பெயரை மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad