மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 21 புதிய பிரிவுகள் சேர்ப்பு. - Asiriyar.Net

Wednesday, February 10, 2021

மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 21 புதிய பிரிவுகள் சேர்ப்பு.

 






மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் மல்லர்கம்பம் உள்ளிட்ட 21 புதிய பிரிவுகளை அரசு சேர்த்துள்ளது. 



மாநிலங்களவையில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதனை தெரிவித்தார்.




பேஸ்பால், பாடிபில்டிங், டிரையத்தலான், வாள்சண்டை, சைக்கிள் போலோ உள்ளிட்ட விளையாட்டுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 



இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ‘சி’ பிரிவு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad