13.02.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2026-இன் பக்கம் 3 மற்றும் 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள Structure and Content அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
NCTE வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழ்நாடு அரசாணை (நிலை) எண் 181, பள்ளிக் கல்வித் துறை, நாள் 15.11.2021 ஆகியவற்றின் அடிப்படையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை GT odor.01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-1 இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும், தாள்-11 இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். இத்தகுதித்தேர்வில் தாள்.1 மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.022026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்:181, பள்ளிக் கல்வித் (C2) துறை, நாள்:15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-1 சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based standard, as well as linkages will be up to the Secondary Stage எனவும், தாள்-II சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI, VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage" எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.
இடம்: சென்னை நாள்: 07.07.2026
ஆசிரியர் தேர்வு வாரியம்


No comments:
Post a Comment