1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - BEO & BRTE - களுக்கு பயிற்சி - SCERT Proceedings - Asiriyar.Net

Friday, July 17, 2026

1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - BEO & BRTE - களுக்கு பயிற்சி - SCERT Proceedings




மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை -06.

1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


பயிற்சி - 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.


பார்வை:


1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.RC.No.2531/A11/FLN-PMU/SS/22 Date 30.03.2023.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.50656/அ1/இ4/2023, நாள் 31.08.2023.

3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2640773/ஊ1/2026, நாள்.11.06.2026.

பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த இணையவழி பயிற்சியில் தங்களது மாவட்டத்திலேயே உரிய அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்படி பயிற்சி சார்ந்து உத்தேச செலவினத் தொகை தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.


இணைப்பு: மைய எண்ணிக்கை விவரப் படிவம்


No comments:

Post a Comment

Post Top Ad