வெப்ப அலை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, July 15, 2026

வெப்ப அலை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை - Director Proceedings




வெப்ப அலை - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை


தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலைச் சூழ்நிலைகளால் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை உறுதி செய்ய பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.


1.அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், தங்களது மாவட்ட பேரிடர் வானிலை மேலாண்மை மையத்திடமிருந்து தங்கள் பள்ளி அமைந்துள்ள வட்டாரம்/ கிராமம் மையத்துடன் குறித்த வானிலை சார்ந்த விவரங்களை தினம் பெற்று அவர்களின் அறிவுரையின்படி செயல்பட தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளி அமைந்துள்ள வட்டாரம்/ கிராமம் குறித்த வானிலை விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் பெறுவதற்கு ஏதுவாக வட்ட பேரிடர் மேலாண்மை மையத்துடன் ஒரு whatsapp group போன்ற செயலி மூலம் இணைப்பதற்குண்டான பணியினை முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும்.


2. அன்றாட வானிலை முன்னறிவிப்புகள், வெப்ப அலை எச்சரிக்கைகள் மற்றும் இதர வானிலை தொடர்பான அறிவிப்புகளை தவறாது அறிந்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


3. இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கடுமையான வெப்ப அலை (Extreme Heat Wave) நிலை ஏற்படும் 6T 607 முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால், அதுகுறித்த தகவலை உடனடியாகப் பெற்று. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


4. சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு நடைமுறையில் உள்ள பள்ளிகளுக்கு இணங்க, அரசு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.


5. மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, நிழலான ஓய்விட வசதி, வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட வெப்ப அலை தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மேற்கண்ட அறிவுறுத்தல்களை உடனடியாகத் தெரிவித்து, அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment

Post Top Ad