பணி நிரவல் குறித்தான தகவல் - Asiriyar.Net

Thursday, July 2, 2026

பணி நிரவல் குறித்தான தகவல்

 

இன்று ஒன்றிய அளவில் நடைபெற உள்ள பணி நிரவல் கலந்தாய்வு கட்டாயமாக நடைபெறும்.


 அனைத்து உபரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 எனினும் காலிப் பணியிடம் இன்மையால் பணி நிரவல் ஒன்றியத்துக்குள் செய்யப்படாத ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பணி நிரவல் கலந்தாய்வு விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒரு ஒன்றியத்தில் ஐந்து காலிப் பணியிடங்கள் மட்டும் இருந்து உபரி ஆசிரியர்கள் எட்டு பேர் இருந்தால் அனைவருக்கும் அந்த ஐந்து இடங்களுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்


 யாரும் செல்லவில்லை எனில் வெளியிடப்பட்டுள்ள பணி நிரவல் முன்னுரிமை பட்டியலில் கடைசியாக உள்ள மோஸ்ட் ஜூனியர் ஐந்து பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படும்


 மீதமுள்ள சீனியர் மூன்று பேர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பணி நிரவல் கலந்தாய்வில் விருப்பத்தின் பேரில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்


ஒரு ஒன்றியத்தில் உபரி ஆசிரியர்கள் ஐந்து பேர் மட்டும் இருந்து காலி பணியிடம் 10 இருக்குமாயின் ஐந்து பேருக்கும் கட்டாய பணி நிரவல் நடைபெறும்.


கூடுதல் தேவை பணியிடங்களும் பணிநிரவலின் போது காண்பிக்கப்படும்


அதையும் உபரி ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம்


நேற்றைய தினம் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் பதவி உயர்வுக்கு பின்னர் பணி நிரவல் நடத்தப்பட வேண்டும் அதுவரை பணி நிரவலை நிறுத்தி வைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்   பணி நிரவல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வெளியாகி உள்ள காரணத்தினால் ஒன்றிய அளவிலான பணி நிரவல் கண்டிப்பாக நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது


No comments:

Post a Comment

Post Top Ad