Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, July 19, 2026

2026-27 "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - DSE & DEE - Joint Proceedings





2026-27 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


லைத்திருவிழா பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும், இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.

அதன்படி, 2026-2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகளை "இளையோர் திறன்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி. வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

LightBlog