மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறான தகவல் அளித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதலில் வீடுகள் கணக்கெடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒத்துழைக்காவிட்டாலோ, வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தாலோ 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment