இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெறும் ஒரெயொரு ஆசிரியருடன் இயக்கி வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, இதுதொடர்பாக விரிவான தரவுகளை வழங்கினார்.
அந்தத் தரவுகளின் அடிப்படையில், கல்வியில் உலக நாடுகளுடன் போட்டிப்போடும் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் இயக்கி வருவதாக மத்திய இணையமைச்சர் சௌத்ரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரத்தில் மட்டும் 16,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரேயொரு ஆசிரியருடன் செயல்பட்டு வருவதாகவும், நாட்டில் ஆசிரியர் - மாணவர்கள் இடையேயான விகிதம் சரியான அளவில் இருந்தபோதிலும், நாடு முழுவதும் அதிகளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையேயான விகிதம் தொடக்கப் பள்ளிகளுக்கு 19-ம், மேல்நிலைக்கு 17-ம், உயர்நிலைக்கு 23-ம் என்ற அளவில் இருப்பதாக கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இருப்பினும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் வெறும் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார் என்பது போதிய அளவிலான ஆசிரியர்கள் இல்லையா? காலிப் பணியிடங்களை நிரப்பவில்லையா? என்ற கேள்வி எழும்புகின்றன.
பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, நாடு முழுவதும் 1,00,843 பள்ளிகளில் வெறும் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆந்திரத்தில் 16,357 பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர்களுடன் நாட்டில் 16 சதவிகிதத்தை பெற்றிருக்கிறது.
வட இந்தியா, தென்னிந்தியா என்றெல்லாம் இல்லாமல், நாடு முழுவதுமே அதிகளவிலான பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
ஜார்க்கண்டில் 9,827 பள்ளிகள், மகாராஷ்டிரத்தில் 9,269 பள்ளிகள், உத்திரப் பிரதேசத்தில் 7,874, ராஜஸ்தானில் 7,200, கர்நாடகத்தில் 8,042 பள்ளிகள், மேற்கு வங்கத்தில் 6,769 பள்ளிகள் என நாடு முழுவதும் இந்த 7 மாநிலங்களில் மொத்தமாக 65 சதவிகித பள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. தெலங்கானாவில் 4,793, தமிழ்நாட்டில் 3,957 மற்றும் அசாமில் 3,159 பள்ளிகள் உள்ளன.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் 3,128, உத்தரகண்டில் 2,655 மற்றும் சத்தீஸ்கரில் 2,461 பள்ளிகள் என நான்கு இலக்கங்களில் இருந்தாலும், மறுபுறம் கேரளத்தில் 67, நாகாலாந்தில் 35, சிக்கிமில் 31, லடாக்கில் 28, தில்லியில் 7, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒன்று என ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் பள்ளிகள் இருப்பதாக மத்திய அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
.jpg)
No comments:
Post a Comment