மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 - திருச்சிராப்பள்ளி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு Enumerators and Supervisors பணிகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது
மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு காலை அல்லது மாலையில் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோருதல் தொடர்பாக.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், 2027-ம் ஆண்டிற்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட பணிகளின் ஒரு பகுதியாக சுய-கணக்கெடுப்பு பணிகள் கடந்த 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், விற்பனைக்கூடங்கள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வதற்கு மாவட்டத்தின் 28 பொறுப்பு அலுவலகங்களின் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பெரும்பாலான ஆசிரியர்களை இப்பணிக்கான Supervisors-களாகவும், Enumerators-களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை களப்பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் அன்னார்கள் பணிபார்த்துவரும் பள்ளி மாணாக்கர்களின் கல்வி பாதிக்காதவாறு. இப்பணியினை காலை வேலையிலோ அல்லது மாலை வேலையிலோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய தகவலை வழங்கி இப்பணியினை எவ்வித தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்திட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment