முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Wednesday, July 22, 2026

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு




முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 8 ஆம் வகுப்பு வரையில் தவெக அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

இதற்கு முன்பு நான் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றிய நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad