'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் -- ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Asiriyar.Net

Friday, July 24, 2026

'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் -- ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்




தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விலேயே இக்கொள்கை முடிவை அறிவித்து, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்


தமிழக தொடக்கக்கல்வித் துறையில் கடந்த 6 ஆண்டுகளாகக் காலியாக உள்ள 3,000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை, அரசின் கொள்கை முடிவின் படி உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தமிழக ஆரம் பப்பள்ளி ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது குறித்து சங்கத்தின் பொதுச்செ யலாளர் டி.ஆர்.ஜான் வெஸ்லி, தலை வர்ப.ருக்மாங்கதன், பொருளாளர்சிவ சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பால் கடந்த 6 ஆண்டுகளாகப் பதவி உயர்வு முடங்கியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் கற்றல்கற்பித்தல் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன


எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, 'பதவி உயர்வு பெற்ற பின் குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்' என்ற நிபந்தனையுடன் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.


மேலும், 90 சதவீதம் பெண் ஆசிரியர்களின் பதவிஉயர்வைப் பாதிக்கும் முந்தைய அரசின் 'அரசாணை 243'ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணையால் லஞ்ச முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விலேயே இக்கொள்கை முடிவை அறிவித்து, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad