பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம் - Asiriyar.Net

Friday, July 24, 2026

பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு: வகுப்பறை செயல்பாடுகளில் மாணவர் 70% பங்கேற்பு அவசியம்


​புதிய பாடத்​திட்​டத்​தின்​படி பேசுதல், கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் 70 சதவீத பங்​கேற்பை உறு​தி​செய்ய வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை​யில் மாநில கல்விக் கொள்​கை​யின்​படி புதிய பாடத்​திட்​டம் தற்​போது உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி ஏற்​கெனவே 1, 2, 3-ம் வகுப்​பு​களுக்கு புதிய பாடத்​திட்​டங்​களின்​படி பாடநூல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தொடர்ந்து 4 முதல் 8-ம் வகுப்​பு​களுக்கு 2027-28-ம் கல்​வி​யாண்​டிலும், 9 முதல் 12-ம் வகுப்​பு​களுக்கு 2028-29-ம் கல்​வி​யாண்​டிலும் புதிய பாடநூல்​கள் வெளி​யிட திட்டமிடப்பட்டுள்ளது

இந்​நிலை​யில் புதிய பாடத்​திட்​டத்​தின்​படி வகுப்​பறை செயல்​பாடு​கள், ஆசிரியர்​கள் கையாளும் முறை, கல்வி அலு​வலர்​கள் ஆய்​வின்​போது கண்​காணிக்க வேண்​டிய அம்​சங்​கள் தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி பாடநூல்​களில் உள்ள செயல்​பாடு, பயிற்​சி,விளை​யாட்​டு, செயல்​திட்​டம் ஆகிய​வற்​றில் கற்​றல் விளைவு​களை அறிந்து ஆசிரியர்​கள் வகுப்​பறை செயல்​பாடு​களை செயல்​படுத்த வேண்​டும்.

கலந்​துரை​யாடல் போன்ற வகுப்​பறை செயல்​பாடு​களில் மாணவர்​களின் பங்​கேற்பு 70 சதவீதம் இருக்​கவேண்​டும். இதையெல்​லாம் கல்வி அலு​வலர்​கள் கண்​காணிக்க வேண்​டும்.

அதே​போல், புதிய பாடத்​திட்​டத்​தின்​படி திறன்​களை மைய​மாகக் கொண்ட மதிப்​பீட்டு முறை தற்​போது கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. மனப்​பாட முறையை பின்​பற்​றாமல் சிந்​தித்து விடை அளிக்​கும் வகை​யில் வினாக்​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளன

கற்​றல் பயணம், நானே செய்​வேன், திறனறி மதிப்​பீடு ஆகிய 3 வகை​யான மதிப்​பீடு​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஆசிரியர்​கள் தங்​கள் அனுபவங்​களை கையேட்​டில் அவசி​யம் பகிர வேண்​டும் என்பன உள்ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன என்​பது குறிப்பிடத்தக்கது




No comments:

Post a Comment

Post Top Ad