கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - கோரிக்கைகள் என்ன? - Asiriyar.Net

Tuesday, August 8, 2023

கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - கோரிக்கைகள் என்ன?

 

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நாள்: 14.08.2023, திங்கட்கிழமை


அடிப்படை ஊதியம் ரூ.36,900 பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரையும் ரூ.56,900 பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரியரையும் சமப்படுத்தி மாவட்டக்கல்வி அலுவலர் பதவி வழங்குவதுதான் சமூக நீதியா?


* முதன்மைக்கல்வ அலுவலரையும், இணை இயக்குநரையும் சமப்படுத்தி இயக்குநர் பதவி உயர்வு வழங்குவீர்கண?


* ஆசிரியர் நிலையில் இருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 23 பேரில் 22 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒரே ஒருவர் மட்டுமே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். இதுதான் சமூக நீதியா? * 45 வருடங்களக மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அடுத்த பதவி உயர்வு என்ன என்பதே தெரியாமல் வைத்திருப்பதுதான சமூக நீதியா?


* நேற்று எங்களுடைய ஊட்டுப்பதவியில் பணியாற்றியவர்கள் இன்று எங்களுக்கே அதிகாரிகளாக வருவதுதான் சமூக நீதியா? * 1990 ல் நியமனம் பெற்ற அனத்து ஆசிரியர்கள், நேரடி நியமன மாவட்டக் அலுவலர்களுக்கும் 3 பதவி உயர்வுகள் வழங்கிட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு பதவி உயர்வு வழங்குவதுதான் சமூக நீதிபா?


* மாவட்டக்கல்வி அலுவலராக தற்காலிக பொறுப்பு வழங்கும் போது சம ஊதிய நிலையில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரஷ்களுக்கு வழங்காமல், ஊட்டுப்பதவியில் உள்ள உயிர்நிலைப்பள்ள தலைமையாசிரியர்களுக்கு வழங்குவதுதான் சமூக நீதியா?


* முதுகலையாசிரியர்களாக நியமனம் பெற்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றுபவர்களின் ருந்துரிமை (Senioriy) ஜ கணக்கில் கொள்ளாமல் அடிப்படை ஊதியம் ரூ.36,900 ல் 10 வருடம் பணியாற்றிய பணி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரையும், அதே ஊதிய நிலையில் 30 வருடம் பணியாற்றிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரையும் சமப்படுத்தி எங்களின் பணி முந்துரிமைனர மறுப்பதுதான் சமூக நீதியா?'


* உயர்நிலைப்பள்ளி தலைமையாசிர்பரைப் போல் மூன்று மடங்கு மாணவர்களையும், ஆசிரிர்களையும் கையாளும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரையும் சமப்படுத்தி, எங்களுக்கு பறவி உயர்வு மறுப்பதுதான் சமூக நீதியா? மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளைக் களைய முக்கழீழரிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 2009ம் ஆண்டு அமைக்கட்ட்ட திரு.ஜெகநாதன் குழு அறிக்கையை 14 ஆண்டுகளான வெளியிடாமல் இருப்பதுதான் சமூக நீதியா?"


சமூக நீதிக்காவலர் மாண்புமிகு-தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் மேல்நிைைலப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நியாயமும், சமூகநீதியும் கிடைக்கும் என்று நம்புகிறோம் பள்ளிக்கல்வித்துறையில் சமூகநீதி காத்திட பணிவீதிகளை நெறிப்படுத்த வேண்டுகிறோம்
Post Top Ad