ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே 10 மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வரும் நீட், ஜெஇஇ போன்ற தோவுகளுக்கு பயற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவா்கள் இல்லை. அதனால் தனியாா் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தொிவித்தாா்.