அரசு வேலை வழங்கக்கோரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனு
ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோறியும், விரைவில் அரசுப் பணி வழங்கக்கோரியும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கள் தேனியில் கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பி.எட். படிப்பை முடித்த ஆசிரியர்கள், ஆரம் பப் பள்ளி ஆசிரியர்களுக் கான டிடிஎட் படிப்பை முடித்த ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற முடியும் என்ற சட்டம் கடந்த 2011 முதல் 'நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.
இதன்படி கடந்த 20ல். வி௩க 9 அரசு வேலை வழங்கக்கோரி, தேனியில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு இதுவரை அரசு வேலை வழங்கப்பட வில்லை.இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமானோர் அரசு பணிக்காக காத்திருக்கின்ற னர்.
இந்நிலையில், அரசுப்: பள்ளிகளில் ஆசிரியராக சேர வயது வரம்பு 40 என தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதை தமிழக அரசு நீக்கம் செய்து, அனைத்து வயதினரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனி யார் பள்ளிகளில் சேர்வ தற்கான வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதனிடையே, ஆசி ரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை கிடைக்காத ஆசி ரியர்கள் நேற்று தேனி யில் கலெக்டர் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அம்மனுவில், விரைவில் அரசு பணி வழங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும். பள்ளிகளில் ஆதிரியர்க ளாக சேர்வதற்கு தேசிய அதிரியர்கல்வி ஆணையம். நிர்ணயித்துள்ள 40 வயது உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும்'என வலியுறுத்து இருந்தனர்.
No comments:
Post a Comment