ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களான பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஊதியமாக ரூ.35,400 – 1,12,400 வரை வழங்கப்படுகிறது.
வாரியத்தின் பெயர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
பணிகள் - ணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்
மொத்த பணியிடங்கள் - 33
விண்ணப்பிக்கும் முறை - நேரடியாக அல்லது பதிவஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.01.2021
ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணி இடங்கள்:
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு 33 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்பார்வையாளர் வயது வரம்பு :
பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் 01.07.2020 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TNRD பணிக்கான கல்வி தகுதி:
ஊரக வளர்ச்சி துறையின் பணிக்கான கல்வித்தகுதியாக Diploma in Civil Engineering பயின்று இருக்க வேண்டும்.
இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம்:
இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.35,400/- – ரூ.1,12,400 வரை அரசு நிர்ணயித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல் முறை:
தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
TNRD கிருஷ்ணகிரி விண்ணப்பிக்கும் முறை:
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் மாவட்ட ஆட்ச்சித்தலைவர் அலுவலகம் www.ncs.gov.in , https://krishnagiri.nic.in என்ற இணைய தளத்திலும் பெறலாம். தக்க சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு) நேரில் சென்று வழங்கலாம் அல்லது கீழே உள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பலாம்.
முகவரி
ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு),
அரை எண் .58,
மாவட்ட ஆட்சியரகம் ,
கிருஷ்ணகிரி.